”5 மாதமாக பேட்டை கையில் எடுக்கவில்லை” – விராட் கோலி..!
செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதியில் இருந்து தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளப்போகும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வலைப்பயிற்சி முன்பு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது என தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி பேசும்போது, ‘5 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பேட்டை எடுத்திருக்கிறேன். வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து விளையாடியபோது கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட முதலாவது வலைபயிற்சி சிறப்பாக இருந்தது.
Bold Diaries: First Practice Session
Watch how the first net session in over 5 months went for most of our players! 🔝#PlayBold #IPL2020 #WeAreChallengers pic.twitter.com/vWsSutD4vw
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 29, 2020
ஊரடங்கு தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் வலுவான உடல்தகுதியுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இன்றைய பயிற்சியின் போது பெரிய அளவில் சிரமம் ஏதும் இல்லை’ என்று தெரிவித்தார். வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் நாளில் நன்றாக பந்து வீசினர். பந்தை சரியான பகுதியில் ‘பிட்ச்’ செய்து நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட்டனர். பயிற்சி சிறப்பாக தொடங்கியுள்ளது என்றார் விராட் கோலி.