இந்தியா

ஐந்து புதிய Postpaid திட்டங்கள் அறிமுகம் – ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த 2019 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏஜிஎம்மில் அறிவித்ததன்படி,  ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் வெறும் ரூ.399 முதல் தொடங்குகின்றன, மேலும் அவைகள் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றிலிருந்து இலவச OTT சந்தாக்களுக்கான வழிகளையும் தருகின்றன. மேலும் இது சர்வதேச பயணிகளுக்கு விமான நெட்வொர்க் இணைப்பு விருப்பத்தையும் அளிக்கிறது.Jio Postpaid plus திட்டத்தின் கீழ் மொத்தம் ஐந்து திட்டங்கள் உள்ளன. அவைகள் ரூ.399 முதல் தொடங்கி ரூ.1,499 வரை இருக்கின்றன.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களின் முக்கியமான சிறப்புகள் என்னவென்றால், டேட்டா ரோல் ஓவர் வசதி, பேமிலி ஷேரிங் மற்றும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் தரப்பட்டுள்ளன.ஐந்து திட்டங்களில் ஒருதிட்டமான, ரூ.999 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தில், 200 ஜிபி அளவிலான ஒருய் மாத டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் சைக்கிளுக்கும் 500 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் ஆப்ஷன், பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக மூன்று சிம் கார்டு போன்ற சலுகைகளை வழங்குகிறது.நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சப்ஸ்க்ரிப்ஷனோடு இது வருகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.