தச்சூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த சுகுமார் (70). இவர் ஆரணியை அடுத்த ஒதலவாடி கிராமத்தில் உள்ள கடந்த 25 ஆண்டுகளாக ஜெயினர் ஆலயத்தில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி ஒருவரின் 4 வயது குழந்தை, பூசாரியின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பூசாரி தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், வீட்டுக்கு திரும்பிய குழந்தை, பூசாரி சாக்லேட் கொடுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், குழந்தையை தச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.
மேலும், இது சம்மந்தமாக ஆரணி கிராமிய காவல்நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, கோவில் பூசாரி சுகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 வயது பெண் குழந்தைக்கு 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பூசாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.