தகவல்கள்தமிழ்நாடு

3 நாளா சாப்பாடு இல்ல, ஓரே ஒரு மெசேஜ் பார்த்ததும் வீடு தேடி வந்து உதவி செய்த காவல் அதிகாரி

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வறுமையில் வாடும் பலர்  அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்,எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கால் யாரும் பாதித்து விட கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் இலவச உணவு பொருட்களும்,1000 ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் இத்தனையும் மீறி ஒரு சில இக்கட்டான சூழ்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட தான் செய்கிறது. அதன்படி தற்போது,விழுப்புரம் ஸ்.பி.ஜெயகுமார் அவர்களது கைபேசிக்கு ஒரு தகவல்  அனுப்பப்பட்டு இருந்தது.

அதில் “மூணு நாளா நாங்க யாரும் சாப்பிடலை. எங்களுக்கு உதவிடுங்கள்” என குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பப்பட்டு இருந்தது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம் அருகே உள்ள அகரம் சித்தாமூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர், “ஊரடங்கால் தமது குடும்பம் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாகவும், சாப்பிட்டு 3 நாட்கள் ஆகிவிட்டதால் தங்களுக்கு உதவ வருமாறும்” உருக்கத்துடன்  வேண்டுகோள் விடுத்து, எஸ்.பியின் செல்போனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதையடுத்து சித்தாமூருக்கு நேரில் சென்ற எஸ்.பி.ஜெயக்குமார், உதவி கேட்ட குடும்பத்தினருக்குத் தனது சொந்த பணத்தில் ஒரு மாதத்திற்கான மளிகைச் சாமான்கள், காய்கறி வாங்கிக் கொடுத்ததோடு, செலவுக்குப் பணமும் கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

கொரோனா பயத்தால் நாடே அமைதியாக  உள்ளது. மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மருத்துவ துறை , காவல் துறை, தீயணைப்பு  துறை என நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை ஆற்றும் துறை மட்டுமே இயங்கி வருகிறது.

அதிலும் காவலர்கள் தன்னலமற்று மக்களுக்காக இரவும் பகலும் சேவை ஆற்றி வருகின்றனர்.இந்த ஒரு நிலையில் தனக்கு வந்த மெசேஜ் பார்த்த உடன், ஓடோடி வந்து உதவி செய்த எஸ் பி ஜெயகுமாரின் உயரிய பண்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.