அமெரிக்காவின் விமான சேவை நிறுவனமான டெல்டா விமானம் கடந்த ஜுலை 23 ஆம் தேதி டிட்ரோய்ட் மாகாணத்தில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா விமானத் தளத்திற்கு பயணிகளுடன் புறப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக உலகிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. சில சர்வதேச விமான நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே பயணிகளை அனுமதிக்கின்றன. இப்படியிருக்கையில் டெல்டா விமானத்தில் பயணித்த 2 பயணிகள் தீடீரென்று மாஸ்க் அணிய மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதனால் கடும் போராட்டம் ஏற்பட்டு பைலட்டுகள் விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே திருப்பியிருக்கின்றனர். இதனால் பயணிகளிடையே கடும் பதற்றம் நிலவியதாகவும் கூறப்படுகிறதுவிமானம். மீண்டும் டிட்ரோய்ட்க்கு சென்ற டெல்டா 2 பயணிகளையும் இறக்கிவிட்டு கடுமையாக எச்சரித்து இருக்கிறது. பின்னர் மீண்டும் மற்ற பயணிகளுடன் அட்லாண்டாவிற்கு அந்த விமானம் பறந்து இருக்கிறது. இந்தத் தகவலை டெல்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கொரோனா பரவல் தீவிரம் அடைந்து இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது குறித்து தற்போது பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.