தமிழ்நாடு
“10-ஆம் தேதி முதல் சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்” – முதல்வர் பழனிசாமி
அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 10000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியவற்றை 10.08.2020 முதல் திறக்கலாம் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாநகராட்சிகளில் ஆட்சியரிடமும் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.