பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வெடிப்பின் மையமான சீன நகரமான வுஹானில் சிங்கம், புலி, , மயில், பாம்பு, வவ்வால் மற்றும் எறும்புதிண்ணி உள்ளிட்ட வன விலங்குகளின் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று-நோய்கள் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி வெட் சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்த சில வாரங்களிலேயே சீனா இந்த முடிவினை எடுத்தது.
கொரோனா வைரஸ் வாவ்வால்களில் இருந்தே தோன்றியதாவும், இது வுகானின் ஈரமான சந்தையில் (வெட் மார்க்கெட்) இருந்தே உலகிற்கு பரவியது நம்பப்படுகிறது.
சீனா கண்டபடி காட்டு விலங்குகளை உண்பதாலயே வைரஸ் தொற்று நோய்கள் பரவுவதாக உலகின் பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று-நோய்கள் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி வெட் சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்