உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று வயல்வெளியில் அதுவும் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் குழந்தையை வயல்வெளியில் வேலைப்பார்த்த சில வேலையாட்கள் பத்திரமாக மீட்டு தற்போது மருத்துவ மனையில் சேர்த்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் நேபாள எல்லை அருகே உள்ள கட்டிமா எனும் கிராமத்தின் வயல்வெளியில் சில பணியாளர்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது துண்டுடன் சுற்றப்பட்ட எதையோ ஒன்றைப் பார்த்து மிரண்டு இருக்கின்றனர். அதையடுத்து அது என்னவென்று தோண்டி பார்த்த போது மேலும் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அதில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் இருந்திருக்கிறது.
வயல்வெளியில் யாரோ ஒருவர் பிறந்த பச்சிளம் குழந்தையை துண்டுடன் சுற்றி அரைகுறையாக புதைத்து விட்டு சென்றுள்ளார். இதை ஏதேட்சையாகப் பார்த்த வேலையாட்கள் குழந்தையைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மீட்கப்பட்ட அந்தக் குழந்தை தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.