தகவல்கள்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று தொடக்கம்…
தமிழகத்தில் தொடக்கத்தில் மழைப்பொழிவு தீவிரமாக இருக்காது எனவும், தென் மற்றும் கடலோர தமிழகத்தில் மட்டும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது.