இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

ரீ-யூசபிள் மாஸ்க்..தமிழக கல்லூரி மாணவர்கள் செய்த புதிய முயற்ச்சி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களுக்கான பற்றாக்குறை இந்தியா முழுவதும் நிலவிவரும் வேளையில் அதற்கான தீர்வை அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள் குழு கண்டறிந்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக்கவசத்துக்குப் பதிலாக, திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடிய முகக் கவசம் ஒன்றின் முதற்கட்ட மாதிரியை (prototype) இந்த மாணவர் குழுவினர் தயாரித்துள்ளனர்.

 

முகக்கவசம் தயாரிக்க செய்த  ஆராய்ச்சிகள்

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறை மாணவர்கள் இதைத் தயாரித்துள்ளனர். இந்த முகக்கவசத்தில் அதிகபட்சம் 80% அளவுக்குக் காற்றை வடிகட்ட இயலும் என்று கூறப்படுகிறது. காற்றை வடிகட்டும் தன்மையோடு, சுவாசத்துக்கு எளிதாக இருக்கும்படியாகவும் இந்த முகக்கவசத்தைத் தயாரித்துள்ளனர்.

இதற்கெனக் கிட்டத்தட்ட 300 வகை துணிகளைப் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இறுதியில் பாலியஸ்டர் கலந்த துணியின் மூலமாக இந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர். பாலியஸ்டரைப் பயன்படுத்தும்போது வியர்வையால் ஏற்படும் ஈரப்பதம் எளிதில் ஆவியாகிவிடுவதால் கிருமிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்குமென்று கூறப்படுகிறது.


கொரோனா முகக்கவசம்

இந்த முகக்கவசத்தை நாம் துணிகளை வைப்பது போன்றே துவைத்துக் காயவைத்து திரும்பத்திரும்பப் பயன்படுத்தலாம். தற்போது மருந்துக்கடைகளில் கிடைக்கும் முகக்கவசங்களைவிடக் குறைவான விலையில் இந்த முகக்கவசத்தை விற்பனை செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். இந்த முகக்கவசம், அனைத்துக்கட்ட சோதனைகளையும் முடித்தபின், உரிய ஒப்புதலுடன் விரைவில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது காற்று ஓட்டத்தைத் தடுக்காது எனவே  சுவாசிக்க பிரச்சனை இருக்காது.  முகமூடியை 20 முறை வரை கழுவி மீண்டும் பயன்படுத்தலாம் எந்த வகை சோப்பு கொண்டு வேணாலும் கழுவலாம் என்று கூறி உள்ளார். இதற்கு ஒரு துண்டுக்கு ₹ 30 செலவாகும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.சுப்பிரமணியன்( தலைமை ஆசிரியர் , அழகப்பா கல்லூரி) கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகம் சுகாதாரத் துறைக்கு ஒரு மாதிரி தொகுதியை வழங்கியுள்ளது மேற்கொண்டு பெரிய அளவில் மாஸ்க்   உற்பத்தி செய்ய பெரிய நிறுவனங்கள் மூலம் செய்ய விடும் என்று தெரிவித்தனர்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.