கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள மசூதிகள் பூட்டப்பட்டுள்ளன. ஆனாலும் பெரும்பலான இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பினை தங்களது வீடுகளில் இருந்து கடைபிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். கொரோனா பரவல் நேரத்தில் நோன்பிருந்து உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுமா? அதனால் கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாக வேண்டிவருமா? எனப் பலகோணங்களில் இருந்து சந்தேகங்கள் எழும்புகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் நோன்பு குறித்து நேர்மறைக் கருத்துகளையே தெரிவிக்கின்றனர். இந்த மாதம் ஏப்ரல் 23 ஆம் தேதி மாலை தொடங்கி ஒரு மாதகாலம் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பினைக் கடைபிடிக்கின்றனர். இந்நேரங்களில் காலை சூரிய உதயத்தில் இருந்து சூரியன் மறைவதற்கு வரைக்கும் எந்த உணவுகளையும் அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. திரவப் பொருட்களையும் தவிர்த்து விடுகின்றனர். கொரோனா நேரத்தில் மசூதிகளில் கொடுக்கப்படும் பாரம்பரிய உணவுகளையே சாப்பிடுவார்கள். ஆனால் உலகம் முழுவதும் தற்போது ஊரடங்கில் இருப்பதால் மசூதிகளில் சாப்பாடு கிடைக்காது. தற்போது பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்து தங்களது வீடுகளில் உணவுகளைத் தயாரித்து உண்ணவும் பல இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மருத்துவர்களின் பார்வையில் நோன்பு நல்லதா
உண்ணாவிரதம் இருப்பது ஒரு விதத்தில் உடலுக்கு நன்மையையே கொடுக்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். உண்ணாரவிரதம் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோன்பு இருப்பது உலகம் தோன்றிய பழங்காலத்தில் இருந்தே தொடருகிறது. மத நம்பிக்கையின் படி கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையின்போது நோன்பில் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையின்போது நோன்பில் இருக்கிறார்கள். இருவரின் நோன்பு காலமும் ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பண்டைய எகிப்தியர்கள் தங்களது உடலை வலுப்படுத்த நீண்டகாலம் நோன்பை கடைபிடித்தனர் என்பதற்கு சான்றுகள் கிடைக்கின்றனர். இந்து மதத்திலும் இந்த நம்பிக்கை வலுவாகவே இருக்கிறது. சித்தர்கள் மற்றும் சித்த வைத்தியம் போன்ற மருந்து முறைகளிலும் சில உணவு விலக்கு, நோன்பு முறை போன்றவை காணப்படுகின்றன.
உடலிலுள்ள உயிரணுக்களில் அதாவது செல்களில் ஏற்படும் வீக்க அளவை உண்ணாவிரதப் பழக்கம் குறைத்து விடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக வலுப்பெறுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது உடலுக்கு ஊடச்சத்து இல்லாத நேரத்தில் அதற்கு எதிராக செல்கள் செயல்புரிந்து ஆற்றலை பெற்றுவிடுகின்றன என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் உடலில் பழைய சேதமடைந்த நிலையில் இருக்கும் செல்கள் பலம் பெற்றவையாக மாற்றப்படுகிறது.இந்த மறுசுழற்சியில் பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உண்ணாவிரத காலம் முடிவடையும் போது நோயை எதிர்க்கும் ஆற்றலை உடல் முழுமையாகப் பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது. நோன்பு முறைகள் அதிகபடியான எடையை குறைக்கவும் உதவுகிறது.
12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரையிலான உண்ணாவிரதம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அடிப்படையிலும் ரமலான் நோன்பு மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதே போன்று எல்லா நோன்புகளும் இருக்கிறதா எனக் கூறமுடியாது. ஏனெனில் ரமலான் நோன்பில் மாலை வேளைகளில் மிகவும் ஆற்றல் கொடுக்கக்கூடிய உணவுகளை மசூதிகளில் வழங்குகிறார்கள். இந்த உணவுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குத் தேவையான ஊக்கத்தைக் கொடுக்கும் முக்கியக் காரணியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.அதேபோல ரமலான் நோன்பில் 12 மணி நேரம் வரை திரவங்களும் தவிர்க்கப்படுகின்றன. இப்படி நீரையும் தவிர்ப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலம் நன்மையடைகிறது எனவும் கூறப்படுகிறது. இஸ்லாமிய மதக்கொள்கைப்படி முறையான விரதத்தைக் கடைபிடிப்பவர்களை மட்டுமே நோன்பிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. காலந்தோறும் இருக்கும் நம்பிக்கை அடிப்படையிலும், மருத்துவ ரீதியாகவும் நோன்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது எனச் சொல்லப்பட்டாலும் கொரோனா விஷயத்தில் இந்தப் பழக்கமுறை எந்தவகையில் நன்மையை பயக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.