வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு திறமை இல்லை என முன்னாள் அதிபர் ஒபாமா ஒருபுறம் குற்றம்சாட்ட, ஒபாமாவுக்கு தான் திறமை இல்லை என பதிலுக்கு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். கொரோனா வைரசுக்கு அமெரிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டிரம்ப் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பேசும்போது, கொரோனா வைரஸ், அமெரிக்க தலைமையின் நிர்வாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இங்கு கொரோனா தவிர எதுவும் இல்லை. அதிகாரிகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கொரோனா வந்து காட்டிவிட்டதாக தெரிவித்தார்.இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் , அதிபர் டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு டிரம்ப் கூறியதாவது: ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார். முற்றிலும் திறமையற்றவர். அவ்வளவு தான் சொல்வதற்கு வேறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close
-
திருநங்கையாக மாறிய WWE சூப்பர் ஸ்டார்!
5 days முன்பு