தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று கரோனாவால் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. இன்று 30 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மூன்றாவதாக அமலாகியுள்ள ஊரடங்கில், மாநில அரசு வசதிக்கேற்ப தளர்வுகள் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், மே மாதம் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா நோய்கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாது என்றும், நிபந்தனையுடன் மதுபான கடைகள் செயல்பட கூறி அறிவித்துள்ளது.மேலும், மதுபான கடைகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், கூட்டம் சேருவதை தடுக்கும் பொருட்டு, மதுபான கடை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மதுபான கடைகள் செயல்படும் என்றும், பார்களுக்கு அனுமதி இல்லை என்றும், ஒரேநேரத்தில் 5 நபர்களுக்கு மேலாக கூடாது என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.