தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை…

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் முன்னோட்டமாக தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் அமலாக்கப்பட்டதையடுத்து, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திட்டம் குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அப்போது கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.