மீண்டும் உச்சத்தில் பெட்ரோல் விலை..!
கொரோனா ஊரடங்கால் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தன. மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.85.04ஆக விற்பனை செய்யப்படுகிறது.சுமார் ஒன்றரை மாதங்கள் பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து ஒரு மாதமாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து ஒரு மாதமாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.