மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகளுடன் ஆலோசனை…
அதிகாரிகபண்டிகை காலம் நெருங்கும் நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்க தி நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை வியாபாரிகளுக்கு புதிய விதிகளை அமல்படுத்த திட்டம் செய்யப்பட்டுள்ளது. இதில் கடைகளுக்கு வெளியே விற்பனை பொருட்கள் மற்றும் விளம்பர அறிவிப்புகள் வைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல் செய்யப்பட்டயுள்ளது. மேலும் கடைகளின் இடவசதிக்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பெரிய கடைகளில் 50 நபர்களை அனுமதிக்கவும், கூடுதல் நபர்களை வேறொரு இடத்தில் அமர வைத்து பின்னர் அனுமதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கடைகளில் பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை குறைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கூடுதல் கண்காணிப்பு. தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விரைவாக பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பவும், கட்டாயம் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.