மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் சேலத்தில் மக்கள் அவதி.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் முதலே ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை நீடித்தது. இதன் காரணமாக சேலம் மாநகராட்சியின் பகுதிக்குட்பட்ட ராமலிங்க சாமி தெரு பகுதியில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முறையான வடிகால் வசதியில்லாததால் ராமலிங்கசாமி தெருவில் உள்ள 300க்கும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. திடீரென 3 அடி உயரத்திற்கு புகுந்த மழைநீரால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இந்த பகுதியில் வீடுகளில் சாக்கடை நீர் புகுவது வாடிக்கையாகி வருவதாக வேதனை தெரிவிக்கும் ராமலிங்கசாமி தெரு மக்கள், நசாக்கடை கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இந்த பகுதியில் வீடுகளில் சாக்கடை நீர் புகுவது வாடிக்கையாகி வருவதாக வேதனை தெரிவிக்கும் ராமலிங்கசாமி தெரு மக்கள், நசாக்கடை கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.