“மத்திய அரசின் முடிவுக்கு நாடே ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு நாடே ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நேற்று முன்தினம் தொடங்கியது. மேலும், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை 13-ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜேஇஇ தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும், அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தேர்வு மையங்களுக்கு செல்ல மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்த முதலமைச்சர்களுக்கு நன்றி என்றும் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.