பொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்!
சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத அதிபர் என்றால் அது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான். இப்படி இருக்கும்போது அவர் பொதுவெளியில் கூறிய பொய்கள் எத்தனை என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வில் நடத்தப்பட்ட கூற்றுகளின் அடிப்படையில் அவர் 30 ஆயிரத்து 573 பொய்களை சொல்லி இருக்கிறார் என்று வாஷிங்டன் போஸ்ட் ஃபேக்ட் செக்கர் குழு தெரிவித்து இருக்கிறது. இந்தத் தகவல் அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் டிரம்ப் தான் பதவி ஏற்றுக்கொண்ட முதல் 100 நாட்களில் கிட்டத்தட்ட 492 உறுதிச் செய்ப்படாத தகவல்களை கூறி இருக்கிறார் என்றும் அது அவருடைய ஆட்சிக்காலத்தின் முடிவில் 30 ஆயிரத்து 573 ஆக அதிகரித்து உள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்து இருக்கிறது. டைம் இதழ் நடத்திய மற்றொரு ஆய்வில் உலக அதிபர்களிலேயே பொதுவெளியில் அதிகமாக தோன்றிய அதிபரும் டொனால்ட் டிரம்ப் என்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி பொதுவெளியில் அடிக்கடி தோன்ற ஆரம்பித்த டிரம்ப் அவருடைய பதவிக் காலத்தின் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 6 தவறான தகவல்களைக் கூறி இருக்கிறார். அதுவே பதவி காலத்தின் முதல் வருடத்தில் 16 ஆகவும் இரண்டாவது வருடத்தில் 22 ஆகவும் இறுதி வருடத்தில் 39 ஆகவும் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. மேலும் இவர் கூறும் தவறான தகவல்கள் அனைத்தும் டிவிட்டர் வாயிலாக பதவிடப்பட்டு இருக்கிறது. இப்படி பதிவிடப்பட்ட அனைத்து தகவல்களையும் டிவிட்டர் நிறுவனம் உடனுக்குடனே அழித்தும் நமக்குத் தெரிந்த கதைதான்.
அதோடு தான் வரிகளை அதிகமாக குறைத்த அதிபர், கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை சரி கட்டியவர் என்றும் தன்னைப் பற்றியே அடிக்கடி பொதுவெளியில் கூறிக்கொண்டு இருக்கிறார். அதோடு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தமைக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாதான் காரணம் என டிரம்ப் கூறியது பலரையும் மலைக்க வைத்து இருக்கிறது. அதாவது ஒபாமா ஆட்சி நிர்வாகத்தில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தது. இந்தக் காரணத்தினால்தான் அமெரிக்காவில் கொரோனா அதிகரித்து உள்ளது என்றும் டிரம்ப் பேசி இருக்கிறார். இப்படி ஒட்டுமொத்தமாக அவர் கூறிய தவறான தகவல்களின் எண்ணிக்கை 30,573 எனத் தெரியவந்துள்ளது.