பெண்களை கவரும் தாடி உள்ள ஆண்கள்!!!
டேட்டிங் ஆப்புகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. வெளிநாடுகளில் இளஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்புக் கொண்ட இந்த டேட்டிங் ஆப்புகள் இந்தியாவிலும் அதன் ஆட்சியை பிடிக்கத் தொடங்கிவிட்டது. பிடித்த ஆண் , பெண்ணை தேர்வு செய்து அவர்களுடன் சில நாட்கள் , சில மாதங்கள் அல்லது ஒரு நாள் என நேரம் கழிப்பதுதான் இந்த டேட்டிங் ஆப். இந்த டேட்டிங்கில் காதல் , நட்பு இப்படி எந்த உறவும் இருக்காது. முதலில் தோற்றத்தால் வசீகரிக்கப்பட்டு பார்த்துப் பழகிய பின் குணத்தால் கவரப்படுவார்கள். அதன் பின்னரே அது நட்பா, காதலா என முடிவாகும். ஒருவேளை பிடித்துபோனால் திருமணம் வரை கூட செல்லலாம். கொரோனா லாக்டவுனில் கூட இளஞர்களுக்கு பேருதவியாக இருந்தது கேம் ஆப்ஸுகளுக்குப் பிறகு இந்த டேட்டிங் ஆப்ஸ்தான்.
இப்போது இந்த டேட்டிங் ஆப்புகளில் ஆண்கள் பெண்களைக் கவர தாடி என்னும் யுத்தியைப் பயன்படுத்துவதாக ஆன்லைன் டேட்டிங் ஆப்- ஆன டிண்டர் ஆப் கூறுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘Beard Baiting’ என்று அழைக்கின்றனர். அதாவது இந்த ட்ரெண்டானது ஆஸ்திரேலியாவில் போகிற போக்கில் தன் தாடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கன்னாபின்னாவென புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துள்ளார். ஆனால் அவரே எதிர்பாராத விதமாக அந்த புகைப்படங்கள் 68.1% மேட்சுகளைக் காண்பித்துள்ளது. அதே தாடி இல்லாத படங்களுக்கு 31.9% மட்டுமே கிடைத்திருக்கிறது.
அவரின் இந்தப் புகைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த மற்ற ஆண்களும் தங்கள் தாடியை காட்டும் விதமாக வகை வகையான புகைப்படம் எடுத்துப் பகிர அவர்களுக்கும் நினைத்த காரியம் நடந்துள்ளது. பிறகென்ன இந்த ‘Beard Baiting’ அப்படியே நாடுகள் விட்டு நாடுகள் டிரெண்டாகி இப்போது இந்தியாவிலும் டிரெண்டாகிவிட்டது. இதில் என்ன சிறப்பெனில் ஆண்கள் தாடி வளர்க்க தற்போது வேகமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனராம். பெண்களைக் கவர ஆண்கள் செய்யும் விஷயங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கு ஏற்ப மாறி வருகிறது. உதாரணத்திற்கு சண்டையிடுவது, போரில் வெற்றிப் பெறுவது, இளவட்டக் கல் தூக்குவது, காளையை அடக்குவது என்றெல்லாம் இருந்த நடைமுறை போய் தற்போது தாடியைக் காட்டி பெண்களைக் கவரும் டிரெண்ட் உருவாகிவிட்டது.
ஆண்கள் டேட்டிங் ஆப்பில் பெண்களைக் கவர பொய் சொல்வதைக் காட்டிலும் ஷேவ் செய்தால் போகக் கூடிய தாடியைத் தானே பயன்படுத்துகிறார்கள். தவறில்லை” என மனநல மருத்துவர் ஷ்ருதி கார் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் கூறியுள்ளார். ஒரு ஆய்வில் கூட நாயின் முடியைக் காட்டிலும் ஆண்களின் தாடி கிருமி நிறைந்தது என்றது. ஆனாலும் பரவாயில்லை என பெண்களுக்கு இந்த தாடிதான் பிடித்துள்ளது. இது என்ன ஒரு மேஜிக்..இதற்கு என்ன காரணம் என ஆய்வு ஒன்று விளக்குகிறது. அதாவது Dixson and Brooks நடத்திய ஆய்வில் தாடி வைத்திருக்கும் ஆண்களைப் பார்க்கும்போது பெண்களுக்கு முதிர்ச்சி அடைந்தவர்கள், நேர்மையானவர்கள், உடலளவில் ஃபிட்டானவர்கள், நம்பிக்கை நிறைந்தவர்கள் என தெரிவதாகக் கூறியுள்ளனர்.