கொரோனா வைரஸுக்கான 9 புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய்ப் பரவல் மற்றும் தடுப்பு மையம் கண்டுபிடித்துள்ளது.கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது.இவ்வைரஸ் தாக்கி 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்; 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருமல், காய்ச்சல், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட சில அறிகுறிகள் மூலம் கொரோனா தொற்று இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், இதற்கான மேலும் 9 அறிகுறிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குளிர், குளிர் நடுக்கம், தசை வலி, தலை வலி, தொண்டைப் புண், வாசனை அல்லது சுவை இழப்பு ஆகியவைதான் அந்த புதிய அறிகுறிகள் ஆகும்.மார்பில் தொடர் வலி அல்லது அழுத்தம், மூச்சு விடுவதில் சிக்கல், முகம் அல்லது உதடு நீலமாக மாறுவது ஆகிய சில கூடுதல் அறிகுறிகளும் சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாம்.இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதும் நல்லது.வைரஸ் தாக்கிய 2 முதல் 14 நாட்களுக்குப் பின்பே கொரோனா அறிகுறிகள் தெரியத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.