சில பிரபலமான யூ-டியூப் சேனல்கள் அதிகமான பார்வைகளுக்காக போலி வீடியோக்களை யூ-டியூபில் பதிவேற்றுகின்றன. சில வீடியோக்கள் பார்ப்பத்திற்கே மிகவும் அசத்தலாக இருந்தாலும் அவற்றை நாம் தெளிவாக சிந்தித்து பார்த்தோமானால் அவற்றின் உண்மைத்தன்மையை பற்றி நாமே அறியலாம்.
45 விநாடிகளுக்கு அடுப்பில் பாலை வைப்பதில் இருந்து கனமான கிரீம் தயாரித்தல். ஆலிவ் எண்ணெய், முட்டை மற்றும் ஒரு சிறிய மூலிகைகளை கொண்டு , சீரான செயல்முறைகள் கூட அல்லாது மயோனைசே (Mayonnaise ) தயாரித்தல். மேலும் குறைவான செயல்முறைகளை கொண்டு பார்த்ததும் கண்ணை கவரும் விதத்தில் உணவுகளை உருவாக்குதல்.போன்ற செய்யல மூலம் இது போன்ற சேனல்கள் பெரிய அளவில் வருவாய் ஈட்டி உள்ளது.
எது போன்ற விடீயோக்களை பார்த்து விட்டு அதனை வீட்டில் செய்ய முயற்சி செய்து பார்த்து , நாம் தான் ஏதோ தவறு செய்து விட்டோம் என பலர் என்னை போல் மனம் உடைந்திருக்க வாய்ப்பு உள்ளது .
மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக்(followers) கொண்ட யூடியூப் சேனல்கள் கூட, இந்த வகையான போலி வீடியோக்களை அதிக பார்வைகளுக்கு உருவாக்குகின்றன.எனவே அடுத்த முறை மதிப்புமிக்க உணவு பொருட்களை கொண்டு யூடியூப் வீடியோவை நம்பி சமையல் அல்லது புதிய டிஷ் உருவாக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள் சிந்தித்து செயல்ப்படுங்கள்.