“பிக்பாஸ்” நிகழ்ச்சியை சாடிய ஓவியா.
தொலைக்காட்சி ரேட்டிங்கிற்காக போட்டியாளர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு மனதளவில் துன்புறுத்தக்கூடாது என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை சாடி நடிகை ஓவியா பதிவிட்ட டுவீட் வைரலாகி வருகிறது. 3 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஓவியா மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறி பாதியிலேயே வெளியேறினார்.இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யலாமா என கடந்த 25ம் தேதி ரசிகர்களிடம் டுவிட்டரில் அவர் கேள்வி எழுப்பினார். அப்போது பல ரசிகர்கள் இதை ஏன் இப்போது பதிவிடுகிறீர்கள் என்று கேட்டபோது. ரேட்டிங்கிற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனதளவில் துன்புறுத்தல் நடந்ததாகவும், இனியாவது அதில் உள்ள விதிகளை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சினிமா சூட்டிங் இல்லாத நிலையில், நடிகை ஓவியா தற்போது சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலுத்திவருகிறார். பல பரபரப்பு கருத்துக்களையும் ரசிகர்கள் உடன் உரையாடும் போது ஓவியா முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது