பாஸ்மதி அரிசியில் நாம் பிரியாணி செய்திருப்போம் ஆனால் இன்று வித்தியாசமாக ஒரு ஸ்வீட் வகையை செய்து பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள் :
- ஒரு கப் பாஸ்மதி அரிசி
- ஒரு கப் சர்க்கரை
- ஒரு கப் பால்
- கால் ஸ்பூன்மஞ்சள் ஃபுட் கலர்
- கால் கப் நெய்
- ஐந்துமுந்திரி பாதாம் தலா
- சிறிது தேங்காய் பல்
செய்முறை:
- பாஸ்மதியை இருபது நிமிடங்கள் ஊற விடவும்.
- வாணலியில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து அரிசியை சேர்த்து வேக விட்டு வடித்து எடுக்கவும்.
- ஒரு பேனில் ஒரு கப் பாலில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும்.
- அதில் வேக வைத்த பாஸ்மதி சேர்த்து வற்றும் வரை கிளறவும்.
- முந்திரி.பாதாம்.தேங்காய் பல் இவற்றை சிறு துண்டுகள் செய்து நெய்யில் வறுத்து கலவையில் சேர்த்து கிளறி பரிமாறவும்.
புது விதமான பாஸ்மதி அரிசியை வைத்து செய்ய கூடிய ஸ்வீட் தயார்.
பாஸ்மதி அரிசி பிரியர்களுக்கு எது நிச்சயம் பிடிக்கும்.ட்ரை பண்ணி பாருங்க .