பாஸ்தா இந்திய சுவையில் செய்வது எப்படி?
முதலில் பாஸ்தாவை தண்ணீரில் போட்டு 7 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளுங்கள்.பின் கடாய் வைத்து வதக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொடியாக நறுக்கி 5 நிமிடங்கள் வதிக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.மீண்டும் கடாய் வைத்து வெண்ணெய் விட்டு உருகியதும் மைதா மாவு சேர்த்து நன்கு வதக்கிக்கொண்டே இருங்கள். மாவு வெண்ணையுடன் நன்கு கலக்க வேண்டும்.
பின் பால் ஊற்றி வதக்கவும். நன்கு கெட்டியான சாஸ் பதம் வரும் வரை வதிக்கிக்கொண்டே இருக்கவும்.பின் அதில் காய்ந்த மிளகாய், மிளகு, உப்பு சிறிதளவு சேர்த்து கலக்குங்கள்.பின் வதக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து வதக்குங்கள்.அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து பிரட்டுங்கள். சாஸ் இறுகி, மசாலா சேர்ந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.அவ்வளவுதான் ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.