பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் தற்போது ரெய்டு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துவிட்டன. இந்த ரெய்டு காரணமாக தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் பல கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால்தினகரன் என்பதும், இயேசு அழைக்கின்றார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிகளுக்கு அவர் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.