“பாஜகவின் போராட்டம் பெண்களுக்கு எதிரானது” – எம்.பி திருமாவளவன்
பாரதிய ஜனதா கட்சி அநாகரீகமாக பேச காவல்துறையினர் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சி மற்றும் காவல் நிர்வாகத்தை பாரதிய ஜனதா கட்சியிடம் தமிழக அரசை ஒப்படைத்து விட்டதா? தனிநபரை விமர்சித்து கண்டனங்கள் நடத்துவது ஆச்சரியமாக உள்ளது இதனை தமிழக காவல்துறை வேடிக்கை பார்ப்பது மிக கண்டனத்துக்குரியது.. தமிழகத்தில் மதவெறிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலாகவே அமைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியினர் தனிநபர் விமர்சனத்தை கடைபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவி ஆகியோர் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள். இதனை தமிழக அரசு அனுமதிப்பது மதவெறி ஆட்டத்தின் களமாக தமிழகத்தை மாற்றும் பாஜகவின் முயற்சியை அதிமுக அனுமதி அளிப்பதாக உள்ளது. பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு கேட்கும் ஒரே கட்சியாக விடுதலை சிறுத்தைகள் உள்ளது. தற்போது நடைபெறும் போராட்டம் என்பது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது அல்ல. பெண்களை எதிர்த்த போராட்டமாக நான் கருதுகிறேன் மனுதர்மத்தை காட்டி தன்னை அச்சுறுத்த முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.