நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்…
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதயனைடுத்து சிகிச்சை பலனின்றி அக்டோபர் 12-ம் தேதி அவர் காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர்கள்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திலுள்ள அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்ததையடுத்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். இதனையடுத்து இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் இல்லத்தில் அவரின் தாயார் உருவ படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதலமைச்சர் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரின் தாயார் உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.