உணவுகள்

நீரிழிவு நோயைத்தவிர்க்க கர்ப்பகாலத்தில் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பது தாய்க்கும் , கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். கார்போஹைட்ரேட் மூலம் அதிகரிக்கும் குளுக்கோஸ் அளவினாலே நீரிழிவு நோய் உண்டாகிறது. எனவே கார்போஹைட்ரேட்டை எப்படி குறைவாக் எடுத்துக்கொண்டு மற்ற ஊட்டச்சத்துகளை அதிகமாக சாப்பிடலாம் என்று பார்க்கலாம். காலையில் கர்ப்பகால ஹார்மோன்களின் ஆற்றல் வேகமாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் சர்க்கரை கலந்த உணவுகளை சாப்பிடுவது சட்டென குளுக்கோஸை உயர்த்தும். எனவே காலை உணவுக்கு பால், பழங்கள், உலர்ந்த பழங்கள் என எந்த இனிப்பு வகைகளையும் சாப்பிடாதீர்கள். முழு தானிய உணவு, புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

ஒரே நேரத்தில் அதிக சாதம் சாப்பிடுவது குளுக்கோஸை அதிகரிக்கும். எனவே சாதத்தை குறைவாக சாப்பிடுகள். வயிறு நிறைய காய்கறி, கீரை, பழ வகைகள் சாப்பிடுங்கள். அவ்வப்போது நட்ஸ் வகைகள் சாப்பிடலாம். அளவு அவசியம் : ஒவ்வொரு உணவின் போதும் எந்த அளவுக்கு கார்போஹைட்ரேட் , மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். உதாரணத்திற்கு 1 கப் சாதம், தானிய வகைகள், கிழங்கு வகைகள் சாப்பிடலாம் என ஒரு வேளை உணவுக்கு சாப்பிடலாம். திணை வகைகள், தானிய வகைகள், பட்டானி, பருப்பு, ஓட்ஸ் என நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நன்கு சாப்பிடுங்கள். பிரெட் சாப்பிட்டாலும் கோதுமை பிரெட் சாப்பிடலாம்.

பால் கால்சியம் சத்துக்கு தேவையானது. இது தாய்க்கு மட்டுமன்றி குழந்தையின் எலும்புகளுக்கும் உதவும். ஆனால் அதேசமயம் ஒரே வேளையில் அதிக பால் குடிப்பது ஆபத்து. எனவே 1 கிளாஸ் பால் குடிப்பதே போதுமானது. பழங்களிலும் இயற்கையான இனிப்புச் சுவை உள்ளது. எனவே ஒரு கப் பழ வகைகள் ஒரு வேளையில் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை கலந்த ஜூஸ் குடிப்பதை தவிருங்கள்.

கேக், குக்கீஸ், சாக்லெட், கேண்டீ, ஸ்வீட் வகைகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென உயர்த்தும். ஜூஸ் வகைகள். சர்க்கரை கலந்த பானங்கள், குளிர் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள். ஃபிரெஷ் ஜூஸாக இருந்தாலும் சர்க்கரை போடாமல் குடிக்கலாம். சர்க்கரை, தேன் , சிரப் என இனிப்பு சுவை கொடுக்கும் எந்த பொருளாக இருந்தாலும் சற்று விலகி இருத்தல் நல்லது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.