நீட்தேர்வு முடிவில் குளபடி ஏன்?
மருத்துவப் படிப்புகளுக்கான் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் குளறுபடியான வகையில் இருந்தன. அதனால் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டிலேயே அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாநிலம் திரிபுரா. இடது சாரிகளின் நீண்ட கால ஆட்சிக்கு பிறகு, பாஜக ஆட்சியை அமைத்தது.முதல்வர் பப்லப் குமார் முதல்வரானார். பாஜகவின் கல்வி குளறுபடிகளில் இது முக்கியமானது. அதாவது, திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் 3,536 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 88,889 பேர். இதில் இந்த ஆண்டு மட்டும் திரிபுராவில் சுமார் 27 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியுள்ளனர். இத்தகைய சூழலில் 88,889 பேர் எப்படி தேர்ச்சி பெற முடியும்?
அதே போல உத்தரகாண்ட் மாநிலத்திலும் குளறுபடி நடந்துள்ளது. இந்த மாநிலத்தில் நீட் தேர்வர்கள் 12,047 பேர் தேர்வெழுதியுள்ளனர். ஆனால் தேர்ச்சி பெற்றவர்கள் 37,301 மாணவர்கள். பாஜக ஆளும் இந்த மாநிலத்தின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கடந்த ஜூலை 26 அன்று, “பசு மாடுகளிலிருந்து தான் ஆக்சிஜன் அதிகமாக வருகிறது. ஆகவே பசுக்களை மசாஜ் செய்ய வேண்டும். அப்போது நாட்டில் ஆக்சிஜன் பெருகும்” என்று அறிவியலுக்கு புறம்பாக பேசினார். அப்படிப்பட்ட மாநிலத்தில் தான் இந்த குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வு எழுதிய இந்த எண்ணிக்கையிலேயே இப்படியான குளறுபடிகள், முறைகேடுகள் என்றால் மதிப்பெண்களில் முறைகேடுகள் நடக்காமல் இருக்குமா? ஆகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.