நாட்டின் மிக மாசு படிந்த அழுக்கான 10 பெரு நகரங்களின் பட்டியல் – தமிழகத்தில் மூன்று நகரங்கள் இடம்பிடித்திருக்கும் அதிர்ச்சி!!!
நாட்டின் மிக தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தும் ஸ்வச் சுர்வேக்சன் என்ற ஆய்வில் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்படும். நேற்று வெளியான பட்டியலில் பத்து லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
அதில் நாட்டின் மிக அழுக்கான பெருநகரமாக பீகார் தலைநகர் பாட்னாவும், அடுத்தபடியாக கிழக்கு டெல்லியும் இடம்பிடித்துள்ளன. அதிர்ச்சி அளிக்கும்விதமாக தமிழகத்தில் 3 பெருநகரங்கள் முதல் 10 அழுக்கு நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. நாட்டின் மிக அழுக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை 3-ம் இடத்திலும், மதுரை 6-ம் இடத்திலும், கோவை நகரம் 8-வது இடத்திலும் இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. எனினும் புதுமைகள் புகுத்தும் மெகா நகரம் என்ற சிறப்புப் பரிசு சென்னைக்கு ஆறுதலாக கிடைத்துள்ளது.