உலகம்தகவல்கள்

நம்ம எல்லாருக்கும் ஒரு முக்கியமான நாள்..!!உலக சமூக வலைத்தளங்களுக்கான நாள்..!! என்ன செய்யனும் வாங்க பாக்கலாம்..

மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

காலை எழுந்தவுடன் வாட்ஸாப் பின்பு மாலை முடியும் வரை இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக், டிண்டர் என்று இரவு தூங்க போகும் வரை இவற்றை மாறி மாறி உபயோகித்துதான் தினமும் நாம் நம் பொழுதை கழிக்கிறோம்.அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது.

உலக சமூக ஊடக தினமான இன்று சமூக ஊடகங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்று பார்ப்போம்.

1. நீங்கள் எந்த சோசியல் மீடியா செயலியை பயன் படுத்தினாலும் அவற்றின் பிரைவசி பாலிசி மற்றும் சேட்டிங்க்ஸை நன்கு பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.உங்களை பற்றிய தகவல் உங்கள் நண்பருடன் மற்றும் பகிரப்படுமா இல்லை அனைவருடன் என்று முடிவு செய்யுங்கள்.

2. ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் போடும் முன் நன்கு சிந்தித்து பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.ஏனெனில் எது உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளது.ஒரு புள்ளி விவரத்தின்படி 70 % பெரின் வாழ்க்கை சோசியல் மீடியா போஸ்டால் போகிறது என்று சொல்கிறது .

3. சில நிறுவங்கள் வேலை வழங்கும் முன் அந்த நபர் பற்றிய தகவல்களை சோசியல் மீடியாவில் சரி பார்க்கின்றனர் என்று ஒரு ஆய்வு கூருகிறது.

4. சமூக வலைத்தளங்களில் சொந்த விஷயங்களை பகிரும் போது கவனமாக இருங்கள்.இல்லையெனில் அவை உங்களுக்கே எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளது.

5. சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் Friend Request தரலாம் , சில நேரங்களில் நமக்கு பெரிதும் அறிமுகம் இல்லாத நபர் கூட நம் Friend list டில் இருக்கலாம். அதனால் நமக்கு நன்கு பழக்கப்பற்றோரை மற்றும் குடும்பத்தினரை தனி தனி குழுக்களாக பிரித்து அதாவது குடும்பம் , நண்பர்கள் , மற்றவர்கள் என்ன பிரிந்து கொண்டு அதான் அடிப்படையில் செயல் படுவது பல பிரச்சனைகளை தடுக்கும்.

6. நீங்கள் பிளாக்கா் அல்லது தனிப்பட்ட நிபுணத்துவம் பெற்றவராக இருந்தால் உங்களுக்கென தனியாக ஒரு Fan பக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
இதனால் உங்கள் சொந்தப்பக்கத்தில்
உங்கள் நண்பர்களுடன் இணைந்து தினசரி நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ளலாம்.

7. உங்களை யாரவது மிரட்டினாலோ ., அவரது சொன்னாலோ , அல்லது தெரியாத நபர் தொந்தரவு செய்தாலோ, அவரை unfriend செய்துவிட்டு block அல்லது report and பிளாக் செய்து விடுங்கள்.

8.தேவையான பாதுகாப்பான செயலிகளை மற்றும் பயன் படுத்துங்கள்.அவற்றை அவ்வப்போது update செய்து கொண்டே இருங்கள்.

9.உங்களுக்கு வரும் mail , அதில் வரும் links போன்ற வற்றை கவனத்துடன் கையாளுங்கள். சந்தேகப்படும் படி இருந்தால் ஒடனே delete செய்து விடுங்கள்.

10.உங்கள் நண்பர்களே உங்களை பற்றி ஏதேனும் தவறான கருத்தை வெளியிட்டால் பதிலுக்கு நீங்களும் அவ்வாறு செய்யாமல் , மனம் திறந்து வெளிப்படையாக அவரிடம் பேசி விடுங்கள்.

முடிந்தவரை சமூக வலைத்தளங்களை பாதுகாப்புடன் உபயோகிப்போம் , சிக்கல் இல்லாத சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.