கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்பட இப்போது வாய்ப்பில்லை என்பதால் கல்வி தடைபடாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இது பிள்ளைகளுக்கு புதிய அனுபவம் என்பதால் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படலாம். எனவே அவர்களை உற்சாகமாவும், சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம். எனவே அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
சமீபத்தில் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுடா திவேகர் வீட்டில் ஆன்லைன் வகுப்புகள் பெறும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்கலாம் எனப் பகிர்ந்துகொண்டார்.இந்த உணவுகள் அவர்களுக்கு தூக்கத்தையும், சோர்வு, களைப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுடா திவேகர் வீட்டில் ஆன்லைன் வகுப்புகள் பெறும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்கலாம் எனப் பகிர்ந்துகொண்டார்.இந்த உணவுகள் அவர்களுக்கு தூக்கத்தையும், சோர்வு, களைப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் எனக் கூறியுள்ளார்.
அப்படி அவர் குழந்தைகளுக்கு பருவகால உணவுகளான வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி என கொடுக்கலாம். இந்த பழங்களை உணவுப் போல் கொடுக்கச் சொல்கிறார். அப்படி காலை உணவாக பழங்களை கொடுக்கலாம். அதோடு அவல், இட்லியும் கொடுக்கலாம் என்று பரிந்துரைக்கிறார். வைட்டமின் பி12 மற்றும் இரும்புச் சத்து இரண்டும் இந்த நேரத்தில் அவசியம். அதற்கு அவை இரண்டும் ஒன்ரு சேர கிடைக்கக் கூடிய தயிர் மற்றும் கருப்பு திராட்சை கொடுக்கலாம் என்கிறார். இதை மாலை அல்லது மதிய உணவுக்குப் பின் ஓய்வு நேரத்தில் கொடுங்கள் என்கிறார். இரவு உணவு என்பது 7 மணிக்கே சாப்பிட்டு விட வேண்டும் என்கிறார். டின்னராக புலாவ், இட்லி , தோசை, சப்பாத்தி , ராகி அடை என தானிய உணவாக அளிக்கலாம் என்கிறார். இரவு உணவு என்பது 7 மணிக்கே சாப்பிட்டு விட வேண்டும் என்கிறார். டின்னராக புலாவ், இட்லி , தோசை, சப்பாத்தி , ராகி அடை என தானிய உணவாக அளிக்கலாம் என்கிறார்.