தேனீ மற்றும் வண்டு கடியின் வலியை குறைக்கவும் வீக்கத்தை போக்கவும் அற்புதமான பாட்டி வைத்தியம் இதோ!
வாழை இலை
வாழை இலையின் சாறு எடுத்து, விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில், தடவினால் வலி கட்டுப்படுத்தப்பட்டு, அந்த இடத்தின் வீக்கமும் விரைவில் குறையும்.
சமையல் சோடா
சமையல் சோடா அல்லது வினிகரை நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, தேனீ கடித்த இடத்தில் தடவினால் அந்த இடத்தின் வலி விரைவில் குறையும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத்தை தேனீ போன்ற விஷபூச்சிகள் கடித்த இடத்தில் தடவினால், உடனே நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டு சாறு
பூண்டின் சாற்றை எடுத்து பூச்சிகள் கடித்த இடத்தில் தடவி, அதை 20 நிமிடம் கழித்து கழுவினால், அந்த இடத்தின் வலி மற்றும் வீக்கம் குறைவாக இருக்கும்.
பப்பாளி
பப்பாளி வீக்கத்தை குறைக்கும் ஒரு சிறந்த பழமாகும். எனவே பப்பாளியின் சதைப்பகுதியை எடுத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், அந்த இடத்தின் கடுகடுப்பு குறையும்.
தேன்
தேனீக் கடிக்கு தேன் தடவினால், தேனில் உள்ள மருத்துவ குணங்கள் மூலம் தேன் கடியால் ஏற்பட்ட வலி மற்றும் அதன் வீரியத்தைக் குறைத்துவிடும்.