தேங்காய் பால் உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…
தேங்காய் பாலை உணவில் மட்டுமல்ல காலையில் ஜூஸ் குடிப்பது போல் தேங்காய் பாலையும் குடித்து வருகின்றனர். ஏனெனில் இந்த தேங்காய் பாலில் நார்ச்சத்து , வைட்டமின் C, E, B1, B3, B5, மற்றும் B6, மினரல், இரும்புச் சத்து, செலினியம், சோடியம், கால்சியம் ,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறந்துள்ளன. இதனால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. அவை என்னென்ன பார்க்கலாம். தேங்காய் பாலில் லாரிக் ஆசிட் இருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.
ஏற்கனவே சொன்னதுபோல் கொழுப்பைக் குறைப்பதால் உடல் எடையும் தானாக குறையும். அதேபோல் தேங்காய் பாலில் டிரைகிளசரஒட் மற்றும் காப்ரிக் , காப்ரிலிக் ஆசிட் இருப்பதால் அவை கொழுப்பு சேருவதை தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். எனவே இது விரைவில் நீங்கள் உடல் எடைக் குறைக்கவும் உதவும். தேங்காய் எண்ணெய் பதம் அளிக்க உதவக் கூடியது. எனவே வறண்ட சருமம், வறண்ட தலைமுடி இருந்தால் அவர்கள் தொடர்ந்து தேங்காய் பால் குடிக்க முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அரிக்கும் வேர்கள், பொடுகுத் தொல்லையும் இருக்காது. அதேபோல் தேங்காய் பாலை கொண்டு மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் பால் சருமத்திற்கு எண்ணற்ற பலன்களை தரக்கூடியது. அதில் முகத்தில் பருக்களை அகற்றி தெளிவான சருமத்தை அளிக்கிறது. தேங்காய் பாலில் பஞ்சு ஊற வைத்து அதை முகத்தில் ஒத்தி எடுத்து காய வைத்துக் கழுவினாலும் சருமத்திற்கு நல்லது. இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதோடு அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இன்சுலின் சுரப்பையும் சீராக கையாளும். வயிற்றில் புண், வடு, வயிறு கோளாறு, செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தொடர்ந்து தேங்காய் பால் குடித்துவர பூரண குணமாகும். வயிற்றில் புண், வடு, வயிறு கோளாறு, செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தொடர்ந்து தேங்காய் பால் குடித்துவர பூரண குணமாகும்.