கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் , இறைச்சிகள் மூலம் கொரோனா வருகிறது என்று தகவல் பரவியதால் பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கவில்லை…இதனால் விலை குறைவாகவே இருந்தது.
இதனையெடுத்து கோழி பண்ணை உரிமையாளர்களின் வேண்டுகோள் , விழிப்புணர்வு நடவடிக்கைகளையெடுத்து பிராய்லர் இறைச்சியை மக்கள் வாங்கத் தொடங்கினர். இதையடுத்து கிலோ ரூ.100க்கும் குறைவாக விற்ற கோழி இறைச்சி ரூ. 180 வரை உயர்ந்தது.இந்நிலையில், ஊரடங்கு தளர்வையடுத்து தற்போது மொத்த விற்பனைக் கடைகளில் பிராய்லர் உயிர்க்கோழி கிலோ ரூ.140 எனவும். சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 260 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி கிலோ ரூ. 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆட்டு இறைச்சி தனிக்கறி கிலோ ரூ.1000க்கும் எலும்பும் கறியுமாக கிலோ ரூ. 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கோழி இறைச்சியையே மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.