தமிழ்நாடுவிளையாட்டு

தமிழக இல்லங்களில் மீண்டும் களம் இறங்கும் பாரம்பரிய விளையாட்டுகள் ! 

தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று வீட்டினுலேயே PUBG விளையாடி கொண்டு உள்ளனர்.

ஓடியாடி கூடி விளையாடும் நம்  பாரம்பரிய குழு விளையாட்டுகள் உடலுக்கு வலுவூட்டல் ,வளைந்து கொடுக்கும் தன்மை, தைரியம், விரைவாக செயலாற்றுதல்  ,மனசக்தி, அறிவுத்திறன் மேம்பாடு, மனக்கூர்மை, படைப்பாற்றல், நினைவாற்றல் மேம்பாடு என எல்லா அம்சங்களையும் கொண்டது.

இந்த லாக் டோவ்னால் ஒரு சில விளையாட்டுகள் மெல்ல தலை தூக்க ஆரமித்து உள்ளது.அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.

1.பல்லாங்குழி

பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். இரு வரிசையிலும் சேர்த்து பதினான்கு குழிகள் இருப்பதால் பதினான்கு குழி விளையாட்டு என்பதை பன்னாங்குழி என அழைத்தனர். பின்னர் பல்லாங்குழி என அழைக்கப்பட்டது. பொதுவாக புளியங்கொட்டையை வைத்தோ அல்லது ஏதாவது பெரிய விதைகளையோ அல்லது சோளிகளையோ ஆடுபொருளாக வைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது.

2.ஆடுகள் புலி ஆட்டம்

பெண்கள் மத்தியில் பிரபலாமான மற்றொரு பலகை விளையாட்டு இது. இருவராக அல்லது இரு குழுவினர்களாக பிரிந்து இந்த விளையாட்டை ஆடுவர். பெயருக்கு ஏற்றார்போல் புலி ஆட்டை வேட்டையாடுவது தான் விளையாட்டு. ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட முயல ஆடுகள் புலியை முடக்க வேண்டும்.

3.ஒத்தையா, ரெட்டையா

வழி 1 :
இந்த விளையாட்டை இருவர் விளையாடுவர். ஒருவர் மற்றவரைப் பார்த்து ஒத்தையா, ரெட்டையா என வினாவுவார். மற்றவர் ஒத்தை அல்லது ரெட்டை என தனக்கு விரும்பியதை கூறுவார். விடை கூறுபவர் ஒற்றை என்றால் மற்றவர் ரெட்டையாகும். இதன் பிறகு விளையாட்டு ஆரம்பமாகும். ஒரு கையில் ஐந்து விரல்கள். ஐந்தையும் மடிக்காமல் எடுத்தால் ஐந்து என எண்ண வேண்டும். மடிக்கும் விரல்களை விட்டு எண்ண வேண்டும். ஒருவிரலை மட்டும் மடித்தால் நான்கு போல். இருவரும் ஒரே நேரத்தில் கையில் விரல்களை மடித்து எண்களை எடுப்பார். இருவர் எடுக்கும் எண்களையும் கூட்ட வேண்டும். கூட்டுத்தொகை ஒற்றை எண்ணாக வந்தால் ஒற்றை சொன்னவருக்கு வெற்றி. இரட்டை எண்ணாக வந்தால் ரெட்டை சொன்னவருக்கு வெற்றி. இவ்வாறு தொடர்ந்து விளையாடலாம்.

வழி 2 :
புளியங்கொட்டையை கையில் மறைத்து வைத்தும் இந்த ஆட்டத்தை விளையாடலாம்.ஒருவர் தன் மூடிய கைகளில் சிறிது புளியங்கொட்டைகளை மறைத்து வைத்து கொண்டு ஒத்தையா ரெட்டைய என்று கேள்வி எழுப்புவர்.
மற்றவர் ஒத்தை என்று சொல்லி , கையில் உள்ள புளியங்கொட்டைகளின் கணக்கு ஒத்தையாக இருந்தால் அந்த காய்கள் அனைத்தும் பதில் கூறியவருக்கு செல்லும்.இதுவே தவறாக இருந்தால் கேட்டவருக்கு அவர் கையில் வைத்திருந்த அதே அளவு புளியங்கொட்டைகளை தர வேண்டும்.

அட்ட தொடக்கத்திலேயே இருவருக்கும் சம்ம அளவு இருப்பு புளியங்கொட்டைகள் கொடுக்கப்பட்டு விடும்.

4.தாயம்

இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயம் மற்றும் காய்களை கொண்டு விளையாடும் சதுரங்க பலகை விளையாட்டு. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் யார்  பலகையின் மையத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வரப்போகிறார் என்பதே விளையாட்டாகும்.

5.பரமபதம்

இந்த விளையாட்டை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. சுருக்கமாக  சொன்னால் ஏணியின் அடியை அடையும் காய் ஏணியின் உச்சிக்கும் பாம்பின் வாயை அடையும் காய் பாம்பின் வாலுக்கும் செல்லும். இந்தத் தடைகளைத் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் நபர்  வெற்றி பெறுவார்.

6.ஒளிஞ்சான் புடிச்சி

இந்த ஒரு விளையாட்டு தான் தற்பொழுதும் சில குழந்தைகள் இன்றைய காலத்திலும் விளையாடும் விளையாட்டாகும். ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள மற்ற குழந்தைகள் வீட்டிற்குள் ஒளிந்துக்கொள்ள வேண்டும். பின்னரே கண்ணை மூடியவர் ஒளிந்திருப்பவரை கண்டுபிடிப்பது தான் விளையாட்டாகும்.

7.கண்ணாமுச்சி

இந்த ஒரு விளையாட்டில் ஒருவர் துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஒரு அறையில் இருக்கும் மற்ற நபர்களை தொட்டு பிடிக்க வேண்டும்.

8.சீட்டு கட்டு

அனைத்து சீட்டுகளும் தலை கீழாக போடப்படும். ஜோடியாக எடுத்தால் வைத்து கொள்ளலாம். யார் அதிக ஜோடி எடுக்கிறாரோ அவருக்கே வெற்றி. – ஞாபக சக்தி வளரும்.

9.நூறாங்குச்சி விளையாட்டு

100  சிறிய குச்சிகளை 1 பெரிய குச்சியையும் ஒருசேரப் பிடித்து நிலத்தில் ஒரே வீச்சில் பரவலாக எறியவேண்டும். உள்ளங்கையால் உருட்டியும் போடலாம். அப்படி எறியும் பொழுது பெரிய குச்சியின் மேல் சிறிய குச்சி ஒன்றேனும் இருக்க வேண்டும். கீழே விழுந்துகிடக்கும் குச்சிகளை பிற எந்தக் குச்சியும் அலுங்காவண்ணம் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்கவேண்டும். அப்படி எடுத்த குச்சிகளின் எண்ணிக்கை வெற்றிப்பள்ளிகளின் பழமாக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் எடுக்கும்மோது ஏதாவது ஒரு குச்சி அலுங்கினால் ஆட்டம் கைமாறும்.

அலுங்காமல் எடுத்த ஒவ்வொரு குச்சிக்கும் ஒரு வெற்றிப்புள்ளி. பெரிய குச்சி எடுத்தால் 10 புள்ளி. இவ்வாறு புள்ளிகள் கணக்கிடப்பட்டுப் புள்ளிகள் கூட்டிக்கொள்ளப்படும். அதிக புள்ளிகள் பெற்றவர் வெற்றி.

  1. ஊதுமுத்து

ஊதுமுத்து என்று கூறப்படும் தமிழக நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாட்டு 1950-க்குப் பின்னர் விளையாடப்படாமல் மறைந்து வருகிறது.இது ஒரு மூச்சுப் பயிற்சி யோகாசன விளையாட்டு. புளியங்கொட்டைகளை முத்து என்பர். முத்துக்களைக் குவியலாக அடுக்குவர். வாய் அடுக்கில் படாமல் ஊதுவர். விலகும் முத்துக்களைத் தனதாக்கிக் கொள்வர். அதிக முத்துக்களை ஈட்டியவர் வெற்றி பெற்றவர்.

இங்கு கூறப்பட்ட விளையாட்டுகள் கொஞ்சம் தான் நம் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை நாம் அறிந்திருக்க கூட மாட்டோம்.நாம் அறிந்த ஒரு சில விளையாட்டுகளையாவது அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்வது நம் பொறுப்பு ஆகும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.