கொரோனோவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தனக்கு வழங்கப்பட செயற்கை சுவாச கருவியை (வெண்டிலேட்டரை) தனக்கு வேண்டாம், அதை சிறுவயது நோயாளி யாருக்காவது கொடுத்து அவரை காப்பாற்றுங்கள் என கூறி உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.
சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அனைத்தும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு கதிகலங்கி போய் உள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சுசேன் ஹாய்லெர்ட்ஸ் என்ற 90 வயதாகிய மூதாட்டி , கோவிட் -19 தாக்குதல் காரணமாக மார்ச் 20 அன்று, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.மோசமான நிலையில் இருந்த அவருக்கு கட்டாயம் வெண்டிலேட்டர் பொறுத்தவேண்டிய சூழ்நிலை அமைந்தது . ஆனால், பெல்ஜியத்தில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனை மனதில் கொண்ட அந்த மூதாட்டி, “நான் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்”. எனக்கு இந்த வெண்டிலேட்டர் வேண்டாம், இளம் நோயாளி யாருக்காவது கொடுத்து அவர் உயிரை காப்பாற்றுங்கள் என கூறி வென்டிலேட்டரை தானம் செய்துள்ளார். மேலும், அடுத்த 2 வது நாள் அந்த மூதாட்டி உயிர் இழந்துள்ளார்.
இந்த சம்பவம் உலகளவில் மக்களிடையே பெரும் சோகத்தையும் நெகிழிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.