தகவல்கள்

தகவல் தர இயலாது – நெடுஞ்சாலைத்துறை பதில்…

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு விவரம் தர இயலாது என்று நெடுஞ்சாலைத்துறை பதில் அளித்துள்ளது. திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் அடிக்க நிகழ்ந்த விபத்துகளால் இந்த சாலையை விரிவாக்க வேண்டும் என்பது பொதுமக்கள் & வாகன ஓட்டிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதையடுத்து  குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லூர் வரை சுமார் 11 கி.மீ தூரம் ₹  55 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்பணிகள்  நடைபெற்று வருகின்றன. இதை பலரும் வரவேற்பதாக சொல்கிறார் தனியார் நிறுவன  ஊழியரான ராஜசேகர்.

அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இந்த சாலையில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகளவு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இத்திட்ட பணிகள் தொடர்பான திட்ட அறிக்கை தொடங்கி, விரிவாக்க பணியின் முழு விபரங்களையும் அளிக்குமாறு, சாலை பணியாளர் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சமுக ஆர்வலருமான அல்லூர் அய்யாரப்பன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கேட்டு நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கடந்த மாதம்  விண்ணப்பித்தார்.இதற்கு,”இச்சாலை பணிகள் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர இயலாது” என்று  நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேல் முறையீீடு செய்ய உள்ளதாக அய்யாரப்பன் கூூறியுள்ளார்.

இதேபோல, திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை குறித்து, நெடுஞ்சாலை துறை அலுவலகம் சென்று விளக்கம் கேட்ட, சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன் என்பவர் மீது ஒப்பந்ததாரர் தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சாலை விரிவாக்கப்பணிகள் குறித்து வெளிப்படையாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையை வைக்காமல் இருப்பதும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டதற்கு பதில் தராமல் இருப்பதும் சந்தேகத்தை தருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் & பொது தகவல் அலுவலர்  வடிவேலிடம் கேட்டதற்கு, ‘சாலை விரிவாக்கப் பணியில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் இடம் இல்லை. தகவல் பெறும் சட்டப்படி கேட்ட அனைத்து விபரங்களையும் தர இயலாது என்பதை விதி 8(13)ன்படி பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை. சாலைப்பணியின் திட்ட மதிப்பீடு, திட்ட காலம், வரைபடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் விரைவில் பொது மக்கள் பார்வையில் வைக்கப்படும்’ என்றார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.