டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிடுவதை நிறுத்துவதாக பார்க் (BARC) அறிவிப்பு..!
செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிடுவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதாக பார்க் அமைப்பு அறிவித்துள்ளது. சில ஆங்கில செய்தி சேனல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக மும்பை போலீஸ் தெரிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் டிஆர்பி விஷயம் பேசுபொருளானது. அதன் நம்பகத்தனமை மீது கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், டி.ஆர்.பி. ரேட்டிங்கை கணக்கிடும் அமைப்பான பார்க், ரேட்டிங்கை மூன்றுமாத காலத்திற்கு நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், செய்தி சேனல்களின் பார்வையாளர்கள் குறித்த தகவல் மட்டும் வெளியிடப்படும் என்றும் தனித்தனி சேணல்களின் பார்வையாளார்கள் எண்ணிக்கை வெளியிடப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
சில நாட்ககளுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ரிபப்ளிக் டிவி, பக்த் மாராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய செய்தி சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ₹400 முதல் ₹700 வழங்கப்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். படிப்பறிவில்லாத ஏழை மக்கள் கூட, தங்கள் வீடுகளில் இந்த ஆங்கில சேனல்களை ஆன் செய்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரம் ஆனது.