“டியர் பிளம்மிங், எங்கள மன்னிச்சுக்கங்க…” – சிஎஸ்கே ‘கோச்’ன்னு கூட பாக்காம இப்படியா செஞ்சு விடுறது??… வைரலாகும் ‘ஐபிஎல்’ அணியின் இன்ஸ்டா ‘பதிவு’!!
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இதற்காக 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதையும், எந்தெந்த வீரர்களை வெளியேற்ற போகிறார்கள் என்பதையும் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்ததது.
இதனையடுத்து, ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், அனைத்து அணிகளும் வெளியேற்றிய வீரர்களையும், புதிதாக வீரர்களையும் உள்ளடக்கி ஐபிஎல் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மொத்தம் 5 வீரர்களை வெளியேற்றி மற்ற வீரர்களை தக்க வைத்துள்ளது. இதில் நியூசிலாந்து வீரர் டாம் செய்பெர்ட்டையும் கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொண்டது.
இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கை கொல்கத்தா அணி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் கிண்டல் செய்து மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் ஸ்டீபன் பிளெம்மிங், ‘மஞ்சள் நிற அணி (சிஎஸ்கே) ஒன்று டாம் செய்பர்ட்டை கவனித்து வருகிறது. மெக்கல்லம் அணியில்லாமல் இங்கு வேறு அணிகளும் உள்ளது’ என கூறியிருந்தார்.
தற்போது நடைபெறப் போகும் ஏலத்தில், டாம் செய்பர்ட்டை சென்னை அணி எடுக்க முயற்சிப்பதைத் தான் பிளம்மிங் அப்படி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது கொல்கத்தா அணி அவரை தக்க வைத்துக் கொண்டுள்ளதால் சென்னை அணியால் நிச்சயம் அவரை ஏலத்தில் எடுக்க முடியாது.
இதனை குறிப்பிட்டு கொல்கத்தா அணி தங்களது இன்ஸ்டா பதிவொன்றில், ‘அன்புள்ள பிளம்மிங், உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். நாங்கள் அவரை தக்க வைத்துக் கொண்டோம்’ என பதிவிட்டுள்ளது.
https://www.instagram.com/p/CKTUzajlf_y/
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மோனு சிங் மற்றும் முரளி விஜய் ஆகிய வீரர்களை வெளியேற்றியுள்ளது. அதன் பிறகு, ராஜஸ்தான் அணியிடம் இருந்து உத்தப்பாவை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.