சென்னை: கொரோனவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை…!
சென்னை: சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுக்க கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் மிக அதிக அளவில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரை சேர்ந்த 50 வயது நபர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் மருத்துவமனையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் செவ்வாய் கிழமை கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டார். அதன்பின் புதன் கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்து கொண்டார். 3வது மாடியில் இருக்கும் மருத்துவமனை அறையில் அவர் இருந்தார். அங்கு கழிப்பறை சென்றவர் உள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரவில் தற்கொலை
அதேபோல் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் ஓமத்தூரார் மருத்துவமனையில் 57 வயது நபர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் அதேபோல் புதன் கிழமை நள்ளிரவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் ராயபுரத்தை சேர்ந்தவர். இவர் ஒரு வாரம் முன் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டார்.
கிளர்க் தற்கொலை
இவர் சென்னை ஹைகோர்ட்டில் கிளர்க் பணியில் இருக்கிறார். தனது வார்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் கொரோனா காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .