சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?
தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
கடந்த 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதோடு இந்த 12 நாட்களில் வரும் 2 ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலம் இந்த புதிய தொற்றுக்கள் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், வணிகர் அமைப்புகள் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்துள்ளன.
மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில நாட்களாக மதுரை, ராணிபேட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிய தொற்றுக்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கின்றன.
சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலம் இந்த புதிய தொற்றுக்கள் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், வணிகர் அமைப்புகள் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்துள்ளன.
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும், காய்கறி, பால் மற்றும் மருந்து கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் சுமார் 3500 கடைகள் மூடப்பட்டன.
மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். ராணிபேட், மதுரை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன.