சென்னை

சென்னையில் “மணலிதான்” பாதுகாப்பான இடமாக இருக்கும் ஒரே மண்டலம்.!!

சென்னையில் நாள்தோறும் உயர்ந்து வரும் கரோனா பாதிப்புகளைப் பார்க்கும் போது சென்னைவாசிகளுக்கு மனதளவில் ஒரு கலக்கம் பிறக்கத்தான் செய்கிறது. நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோமா?
கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மேலும் 1,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் நாளொன்றுக்கு 100-க்கும் குறைவானவா்களுக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பரிசோதனைகளை அதிகப்படுத்தியதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக தெரியவந்ததது.நாள்தோறும் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆரம்பம் முதலே ஒரே ஒரு மண்டலத்தில்தான் கரோனா பாதிப்பு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அது இரண்டாவது மண்டலம் மணலிதான். இங்கு இதுவரை 383 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 4 பேர் மரணம் அடைந்துவிட்டனர். 204 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 175 பேர் குணமடைந்துள்ளனர்.
6 மண்டலங்களில் உச்சம்: ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 4,405 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 3,405 பேருக்கும், தேனாம்பேட்டையில் 3,069 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 2,805 பேருக்கும், திருவிக நகரில் 2,456 பேருக்கும், அண்ணா நகரில் 2,362 பேருக்கும், அடையாறில் 1,481 பேருக்கும் புதன்கிழமை (ஜூன் 10) தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த 6 மண்டலங்களில் மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில்லாமல் வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துவிட்டது. அம்பத்தூர் மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் கரோனா பாதிப்பு 900 என்ற அளவில் உள்ளது.
கரோனா பாதிப்பு ஒரு பக்கம் உயர்ந்து வரும் நிலையில், கரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, சென்னையில் 18 போ உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 260-ஆக அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலானோா் 50 வயதுக்கு மேற்பட்ட ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களாவா்.
உயிரிழப்பு விவரம் மண்டலம் வாரியாக
ராயபுரம் 52, திருவிக நகா் 43, தேனாம்பேட்டை 37, தண்டையாா்பேட்டை 29, அண்ணா நகா் 23, கோடம்பாக்கம் 18, அடையாறு 11, ஆலந்தூா் 7, அம்பத்தூா் 7, வளசரவாக்கம் 6, மணலி 4, திருவெற்றியூா் 3, மற்றும் மாதவரம் 2.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.