சென்னையில் பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம்…
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை இன்று சென்னை பார்த்தசாரதி கோயில், சென்னை திநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்த மான பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கொரோனா தொற்று காரணமாக பெருமாள் கோயில்களில் வழக்கமான பூ அலங்காரங்கள் தோரண அலங்காரங்கள் இல்லாமல் இருந்தது புரட்டாசி சனி கிழமைகளில் அதிகாலை நான்கு மணிக்கு திறக்கும் கோயில்கள் காலை 6 மணிக்கு தான் திறக்கப்பட்டது.
தரிசனத்திற்கு வருபவர்கள் பூ மாலை எடுத்துவருபது தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் கட்டாய முகக்கவசம் ,தனிமனித இடைவெளி பின்பற்ற அறிவுரை மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. மேலும் கோயில் உள்ளே வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னருமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.நேற்று இரவு முதல் சென்னையில் மழை என்பதாலும் கொரோனா காலம் என்பதாலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.