தகவல்கள்

சுறுசுறுப்பான மூளைக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்…

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் இன்றியமையாதது. அதிலும் முக்கியமாக உலகத்தை இயந்திரமாக இயக்கிவரும் மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நம் மூளை சரியான பாதையில் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு சரியான நேரத்தில் நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம். பின்வருவனவற்றை செய்வதால் போதுமான தூக்கத்தை பெற்றலாம். இப்போது ஏற்பட்டுள்ள காலமாற்றத்தால் மனிதன் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறான். ஆகையால் பெரும்பாலானோருக்கு உடற்பயிற்சி செய்யவும், யோகா/தியானம் செய்யவும், மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர்.

மேலே கூறியதுபோல் அடிப்படையானது போதுமான தூக்கம். நம் மூளை சரியான நேரத்தில் சரியான வேலையை செய்வதற்கு போதுமான தூக்கம் மிகவும் அவசியம். நம் உடலில் உள்ள உறுப்புகள் சரிவர இயங்குவதற்கு தூக்கமே மூலதனம் என்று பல நிபுணர்கள் கூறி வரும் வேளையில் சரியான நேரத்தில் கிடைக்கும் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்வதால் மன அழுத்தம், தேவையற்ற சிந்தனைகள், தவறான பழக்கம், உடல் எடை என பலவற்றிலிருந்து தீர்வினை பெறலாம். தூக்கமும் மூளையின் செயல்பாடும் : ஒருவர் குறைந்தது ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். அவ்வாறு தூங்குவதால் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் தேவையான ஆக்சிஜனை சுவாசித்து நம் உறுப்புகளை எப்பொழுதும் துடிப்புடனும் இளமையுடன் வைத்திருக்கும்.

நாம் தூங்கும்போது நம் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும் குறிப்பாக சுவாசித்தல், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் உடல் வளர்ச்சி போன்றவைகளில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானது. உளவியல் மற்றும் உயிரியல் சார்ந்த பல செயல்பாடுகள் நாம் தூங்கும் பொழுது நம் உடலுக்குள் அமைதியாக நடந்து கொண்டிருக்கும். நம்மால் அதை உணர முடியாது. ஆனால் அதன் முடிவினை நம்மால் தெரிந்துகொள்ள இயலும். கவனச்சிதறல், மறதி, செய்யும் வேலையில் திருப்தி இன்மை, உடல் அசதி, சோம்பல் போன்ற பலவற்றிற்கும் போதுமான தூக்கமின்மை காரணமாகிறது. நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்நாளில் நாம் எடுத்துக் கொள்ளும் உறக்க நேரம் மிக முக்கியமானது. அனைத்தையும் மறந்து நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இருந்தால் உடல் மற்றும் மனம் சார்ந்த நன்மைகள் ஏற்படும். தூக்கமின்மை உங்களை மணம், சமூகம், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான ஒற்றுமையை குலைக்கும்.

உங்களை உடல் பருமன், பசியின்மை ,ஹார்மோன் மாற்றங்கள், பதட்டம், படபடப்பு, மந்தநிலை, மன நிலையில் மாற்றம், இதய பிரச்சனைகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மோசமான கோளாறுகளுடன் உங்களை இணைத்து விடும். ஆகையால் ஒவ்வொரு வயதினருக்கும் போதுமான தூக்கம் என்பது அவசியம். அதில் கட்டாயம் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அனைவரும் மேற்கொள்ள வேண்டியது முக்கியம். உங்களை உடல் பருமன், பசியின்மை ,ஹார்மோன் மாற்றங்கள், பதட்டம், படபடப்பு, மந்தநிலை, மன நிலையில் மாற்றம், இதய பிரச்சனைகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மோசமான கோளாறுகளுடன் உங்களை இணைத்து விடும். ஆகையால் ஒவ்வொரு வயதினருக்கும் போதுமான தூக்கம் என்பது அவசியம். அதில் கட்டாயம் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அனைவரும் மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.