சாத்தான்குளம் சித்திரவதை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு இப்படி ஒரு சலுகையா…!
சாத்தான்குளம் சித்திரவதை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட காவலர்களை விசாரணையின்போது தாக்க கூடாதென நீதிபதி உத்தரவு…
தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை தற்போது சிபிஐ கொலை வழக்காக மாற்றியுள்ளது. மேலும், உதவி ஆய்வாளர் ராகு கணேஷ் முதல் குற்றவாளி என இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார்.
அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள காவலில் எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. ஆனால், விசாரணைக்கு உடன்படாத 5 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வாதாடிய சிபிஐ தரப்பு, 5 போரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றது.
இந்நிலையில், விசாரணையின் போது 5 போலீசாரையும் மன அழுத்தம் ஏற்படும்படி விசாரணை மேற்கொள்ள கூடாது எனவும், காவலர்களை தாக்கி துன்புறுத்தக்கூடாது என மதுரை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்.