வறட்சியைத் தாங்க கூடியது சீந்தில் கொடி என்பதால் பரவலாக எல்லா இடங்களிலும் இதை பார்க்க முடியும். கொடி என்றாலும் கூட கொடி தரையில் ஊன்றி தழைக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக இருக்கும் பூ ஆண் பூ என்றும் தனியாக இருக்கும் பூ பெண் பூ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். நரம்புகள் தெளிவாக இருக்கும். கிளைகளில் சுரப்பி புள்ளிகள் இருக்கும். கொடியிலிருந்து ஆலமரம் போன்று விழுதுகள் தொங்கி இருக்கும். காய்கள் உருண்டு இருக்கும். பழமாகும் சிவப்பாக இருக்கும். இளம் சீந்தல் கொடியை காட்டிலும் முற்றிய கசப்பு மிக்க சீந்தல் கொடிக்கே மருத்துவ குணங்கள் அதிகம்.
சீந்தில் கொடியை காயவைத்து பொடித்து வைக்கவும். இதை பசும்பாலில் கற்கண்டுத்தூள் சேர்த்து பாலில் கலந்து குடித்துவந்தால் ஆயுள் அதிகரிக்கும். உடலில் இன்சுலின் சுரப்பு குறையும் போது தான் சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறுகிறது. சீந்தில் கொடி இன்சுலின் சுரப்பு அதிகரித்து குளுக்கோஸ் அதிக உற்பத்தியாவதை தடுத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சீந்தில் உதவுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவு குறைப்பதில் இவற்றின் பங்கும் பெருமளவு உண்டு என்று தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவை உடலுக்கு பக்கவிளைவுகளையும் உண்டாக்குவதில்லை என்பது குறிப்பிடதக்கது.
சீந்தில் கொடி இலைகளை பிரித்து நிழலில் உலர்த்தி கொள்ள வேண்டும். இந்த பொடியை காலையும் மாலையும் பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.காய்ச்சலுக்கு பிறகு வயதுக்கேற்ப ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரை வாயில் இட்டு நீர் குடிப்பதால் கடும் காய்ச்சல் உபாதைக்கு பிறகு வலிவிழந்த உடல் பலமாக கூடும்.சீந்தில் சர்க்கரை இருமல், மண்ணீரல், வாந்தி, ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஈரல் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் ஆரம்ப கட்டத்தில் இதை சாப்பிட்டு வந்தால் ஈரல் பலமாகும். நாள்பட்ட செரிமான பிரச்சனை கொண்டிருப்பவர்கள் சீந்தில் கொடியுடன் அதிமதுரப்பொடி சிறிதளவு எடுத்து, அதோடு சோம்பு. பன்னீர் ரோஜா சேர்த்து நீர் விட்டு ஊறவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி தினமும் கால் டம்ளர் அளவு குடித்துவரவேண்டும். இது வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.சீந்தில் இலையை அனலில் வாட்டி இளஞ்சூட்டோடு வதக்கி புண்களின் மீது போட்டு கட்டி வர புண்கள் விரைவாக ஆறும். புண் வீக்கம் குறையும். விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சீந்தில் கொடி பயன்படுத்திய பிறகு காயங்கள் விரைவாக ஆறியது கண்டறியப்பட்டது மேலும் காயம் ஆழமாக இருந்தாலும் அந்த இடத்தில் இணைப்பு திசுக்கள் திறம்பட வளர்ந்ததும் கண்டறியப்பட்டது. எனினும் இந்த ஆய்வுகள் மனிதர்களிடம் ஆய்வு செய்து நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதை முன்னோர்கள் காயத்துக்கு மருந்தாகவே பயன்படுத்திவந்தது குறிப்பிடத்தக்கது.