தமிழ்நாடு

‘கோவேக்சின்’ தமிழகத்தில் இன்று பரிசோதனை!!!

ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும், பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. கோவேக்சின் மருந்தில் 2 விதமான சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி இந்தியா முழுவதும் 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடத்தப்படுகிறது.இதில் தமிழகத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மட்டும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இன்று தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. சோதனை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.