2020-ஆம் ஆண்டு ஒரு உணவாக இருந்தால், அது என்ன டிஷ்-ஆக இருந்திருக்கும் என்று உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ கேட்டுள்ளதற்கு டிவிட்டர்வாசிகள் கூறியுள்ள பதில்கள் வைரல் ஆகியுள்ளன.
கொரோனா எனும் கொடிய வைரஸ் சீனாவில் உருவாகி 3 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரம் பேராக உள்ளனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ நிறுவனம், “2020-ஆம் ஆண்டு ஒரு உணவாக இருந்தால், அது என்ன டிஷ்-ஆக இருந்திருக்கும்” என்று ட்விட்டரில் கேட்டுள்ள கேள்விக்கு,சோமாடோ இந்த ட்வீட்டை வெளியிட்ட உடனேயே பதில்கள் வந்து குவிந்தன. சில நெட்டிசன்கள் அவர்கள் மிகவும் வெறுக்கிற டிஷ் பெயருடன் பதிலளித்தாலும், இன்னும் பலர் படைப்பாற்றலோடு வித்தியாசமான பதில்களைக் பதிவிட்டு இந்த பதிவை வைரலாகி உள்ளார்.
‘கொரோனா பர்கர்’, ‘பீட்சாவும், டோபிங்ஸாக பிளாக் ஷூ பாலிஷூம்’,’சைனீஸ் குருமா’ ,’வவ்வால் சூப் என்றெல்லாம் விதவிதமாக கமெண்டுகளை ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.